2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா சூழ்நிலைக் காரணாகவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் இரண்டாம் கொரோனா  அலையின் தாக்கம் காரணமாக சாதாரண தரப் பரீட்சையை 2021 ஜனவரி 18 முதல் 27 வரை நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.