‘புரெவி’ சூறாவளியால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் 65 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன்படி யாழ்ப்பாணத்தில் 134 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேரும், கிளிநொச்சியில் 628 குடும்பங்களைச் சேர்ந்த 1,949 பேரும், மன்னாரில் 324 குடும்பங்களைச் சேர்ந்த 1,114 பேரும் மற்றும் முல்லைத்தீவில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 422 பேரும் இவ்வாறு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சூறாவளி தாக்கம் காரணமாக 15 வீடுகள் முழுமையாகவும் 170 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.