இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி கேப்டவுனினல் நடத்தது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் அதிகபடியாக டூப் பிளிஸ்சிஸ் (52 ஓட்டம் வான்டெர் துஸ்சென் (74 ஓட்டம்) அரைசதம் அடித்தனர். 

192 ஓட்டம் என்ற வெற்றியிக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 192 ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஜோஸ் பட்லர் 67 ஓட்டங்களையும், டேவிட் மலான் 99 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். 

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்த தொடர் முடிவின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. 

இதில் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 915 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் அதிக புள்ளிகள் குவித்த துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை டேவிட் மலான் படைத்துள்ளார்.