காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைவர் ஷாஹித் அப்ரிடி மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாட இலங்கைக்கு வருகை தந்த ஒரு வாரத்திற்கு பின்னர் அப்ரடி, தனிப்பட்ட அவசர தேவை காரணமாக இவ்வாறு பாகிஸ்தான திரும்பியுள்ளார்.

பாகிஸ்தான் புறப்படும் அப்ரடி எத்தனை நாட்களுக்கு பின்னர் இலங்கை திரும்புவார் என்று கூறப்படவில்லை.

அப்ரடி திரும்பி வந்தால் அவர் மீண்டும் ஒரு சுருக்கமான தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டியிருக்கும். 

இதேவேளை அப்ரடி இல்லாத சமயத்தில் இதுவரை தான் எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள காலி கிளாடியேட்டர்ஸ் அணியை அதன் உப தலைவர் பானுக ராஜபக்ஷ வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அப்தாப் ஆலமும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆப்கானிஸ்தானுக்கு புறப்பட்டுள்ளார்.