நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இரு உயரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சிலாபம் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 13 ஐ சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 124 உயர்வடைந்துள்ளது.

அத்தோடு நாட்டுல் இன்று ஒரே நாளில் 878 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.