நாட்டின் ஒரு­மைப்­பாட்டை நாங்கள் எதிர்க்­க­வில்லை. ஆனால், தமி­ழர்­க­ளா­கிய எமது தனித்­து­வ­மா­னது பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தையே நாங்கள் வலி­யு­றுத்­து­கின்றோம் என்று கனே­டிய வெளி­வி­வகார அமைச்சர் ஸ்டெபன் டை­னிற்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ள­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்கி­னேஸ்­வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஏனைய மாகா­ணங்­க­ளுடன் ஒப்­பி­டு­கின்ற போது வட­மா­கா­ணத்தில் அபி­வி­ருத்தி உத்­வேகம்  குறைந்தே காணப்­ப­டு­கின்­றது என்­ப­தையும் அவ­ரிடம் எடுத்­து­ரைத்­துள்­ள­தாகவும் அவர் கூறினார்.

இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ள கனே­டிய நாட்டின் வெளி­வி­கார அமைச்சர் ஸ்டீபன் டையோன் நேற்­றைய தினம் வடக்­கிற்கு விஜயம் செய்­தி­ருந்தார். இதன் போது வட­மா­காண முத­ல­மைச்­சரை கைத­டியில் அமைந்­துள்ள அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­ல­கத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டார்.

இக் கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு விளக்­க­மளிக்­கை­யிலே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

இந்த கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக முத­ல­மைச்சர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

கலந்­து­ரை­யா­ட­லின்­போது நாட்டில் தற்­போ­தைய அர­சியல் நிலை எவ்­வா­றுள்­ளது என்­பது தொடர்­பாக வெளிவி­வ­கார அமைச்சர் என்­னிடம் வின­வி­யி­ருந்தார். அர­சியல் நிலைமை ஓர­ளவு ஆத­ர­வ­ளிக்கக் கூடி­ய­தாக இருந்­தாலும் நாட்டின் ஏனைய மாகா­ணங்­க­ளுடன் வட­மா­கா­ணத்தின் அபி­வி­ருத்­தியை ஒப்­பி­டு­கையில் உத்­வேகம் குறைந்­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

இரா­ணு­வத்­தினர் தற்­போதும் அதி­க­ள­வான காணி­களை தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­பதால் அக்­கா­ணி­க­ளுக்­கான உரி­மை­யா­ளர்கள் இடம்­பெ­யர்ந்த நிலையில் தமது சொந்த இடங்­களில் மீளக்­கு­டி­யேற முடி­யாமல் உள்­ளனர். இதனால் அவர்கள் தற்­போதும் தற்­கா­லிக முகாம்­க­ளி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். குறிப்­பாக இந்த மக்கள் கடந்த 26 வரு­டங்­க­ளாக சொந்த இடங்­க­ளிற்கு செல்ல முடி­யாது நெருக்கடிகளுக்குள் வாழ்ந்து வரு­கின்­றனர் என்­பதை அவ­ரிடம் எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தேன்.

இதன்­போது கனே­டிய வெளி­வி­வ­கார அமைச்சர்இ தமது நாடும் இலங்­கையை போன்று பிரி­வி­னை­வாத பிரச்­சி­னைக்குள் அகப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அதில் இருந்து மீண்டு தற்­போது கூடிய வலு­வுடன் முன்­னேறி வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார். அத்­துடன் இவ்­வா­றான நிலையை இலங்கை அடை­யுமா? எனவும் அதற்­கான தடைகள் எவ்­வா­றுள்­ளன? எனவும் அவர் என்­னிடம் கேட்­டி­ருந்தார்.

இலங்கை சுதந்­திரம் அடை­வ­தற்கு முன்னர் அவ்­வா­றான நிலை தான் இங்கே இருந்­தது. நாடு­பூ­ரா­கவும் தமிழ் மக்கள் தமது தொழில்­களை மேற்­கொண்டு சுதந்­தி­ர­மாக சென்று வந்­தி­ருந்­தார்கள். இருந்­த­போ­திலும் 1956ஆம் ஆண்டு ஆட்சி மொழி­யாக சிங்­களம் மட்டும் என்ற சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்தே தமிழ் மக்­க­ளுக்கு பல்­வேறு வித­மான பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டதை எடுத்­து­கூ­றி­யி­ருந்தேன்.

மேலும் நாட்டின் ஒரு­மைப்­பாட்டை நாங்கள் எதிர்க்­க­வில்லை. இத்­த­கைய விட­யத்தை எங்­க­ளது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டி­ருந்தோம். அந்­த­வ­கையில் நாங்கள் பிரி­வி­னை­வா­தத்தை ஆத­ரிக்­க­வில்லை. ஆனால் எங்­க­ளது தனித்­துவம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­ப­தையே நாங்கள் வலி­யு­றுத்­து­கின்றோம்.

இங்கே தனித்­துவம் எனும் போது தமிழ் மக்கள் மொழி, மதம், கலாச்­சாரம், பாரம்­ப­ரியம், வாழ்க்கை முறைகள் என்பன உள்­ள­டங்­கு­கின்றன. இவை நாட்­டி­லுள்ள ஏனைய பிர­தே­சங்­களை விடவும் வித்­தி­யா­ச­மாக உள்­ள­மை­யினால் அவை பேணப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் எடுத்­து­கூ­றி­யி­ருந்­த­துடன் அவற்றை எம் மக்கள் முற்­று­மு­ழு­தாக அனு­ப­விக்க முடி­யா­துள்­ள­மையையும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன்.

இதனை உள்­வாங்­கிக்­கொண்ட அவர் என்­னிடம் நீங்கள் தமிழர் எனக் கூறு­வ­திலா? இலங்­கையர் எனக் கூறு­வ­திலா? பெரு­மைப்­ப­டு­கின்­றீர்கள் என என்னிடம் கேட்­டி­ருந்தார். அதில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. ஆனால் எமது தனித்­து­வ­மா­னது பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என அவ­ரிடம் குறிப்­பிட்டேன்.

தற்­போது வட­மா­க­ணத்­திற்கு வெளியில் இருந்து சிறிது சிறி­தாக இர­க­சிய உத்­தி­களின் மூலம் வெளி­மா­வட்­டத்­தி­னரை இங்கு கொண்டு வந்து குடி­யேற்­று­வ­தற்கு முனைப்­பு­காட்­டி­வ­ரு­கின்­றனர். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­யா­னது எமது தனித்­து­வத்தை அழிப்­ப­தற்கு ஒப்­பான செயற்­பா­டா­கவே அமையும் என்­பதை குறிப்­பிட்­டி­ருந்தேன்.

மேலும் இச் சந்­திப்பில் பல விட­யங்கள் தொடர்­பா­கவும் பேசி­யி­ருந்தோம். அத்­துடன் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார், கன­டா­வா­னது இலங்கை ஐக்­கி­யத்­து­டனும் ஒரு­மைப்­பாட்­டு­டனும் முன்­னேற்றம் காண வேண்டும் என்­பதில் கண்ணும் கருத்­து­மாக இருக்­கின்­றது. இந்­நி­லையில் இலங்­கையின் இரு­மொழிப் புல­மைக்கு உத­விகள் வழங்­கப்­படும். அத்­துடன் நல்­லி­ணக்க நல்­லாட்சி செயற்­பா­டு­க­ளுக்கு எமது நாடு என்றும் உதவும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.