புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படுமென வடமேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ள புரவி சூறாவளியால் வடக்கு பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை 03 ஆம் திகதி மூடுவதாக தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.