கொட்டும் மழையில் நெலுந்தெனியவை சென்றடைந்தது பாதயாத்திரை : பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு தன்சல் வழங்கிய மக்கள்

Published By: MD.Lucias

29 Jul, 2016 | 05:59 PM
image

(கேகாலையிலிருந்து லியோ நிரோஷ தர்ஷன்)

கொட்டும் மழைக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணி இரண்டாவது நாளான இன்று கேகாலை நெலுந்தெனிய வரை சென்றடைந்தது.

கூட்டு எதிர்க் கட்சியின் கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிய பாதயாத்திரையின் இரண்டாவது நாளான இன்று காலை 10.30 மணியளவில் உதுவன்கந்த பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் இருந்து ஆரம்பமாகியது.

 மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் மதவழிபாடுகளின் பின்னர் கொழும்பை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பித்தனர்.

கொட்டும் மழைக்கு மத்தியில் சிங்கள பாரம்பரிய நடனம் மற்றும் மயிலாட்டம் என கலைக்கட்டிய கூட்டு எதிர்க் கட்சியின் இரண்டாம் நாள் பாதயாத்திரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும,கெஹலிய ரம்புக்வெல்ல, நாமல் ராஜபக்ஷ ,உதய கம்மன்பில,பவித்ரா வன்னியாராச்சி, மஹிந்தானந்த அழுத்கமகே, அமுனுகம, கீதா குமாரசிங்க, குமார வெல்கம,சீ .பி .ரத்நாயக்க, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ,பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட கூட்டுஎதிர் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

நல்லாட்சியே வெளியேறு, ஆட்சியை கொடு,நாட்டை பாதாளத்தில் தள்ளாதே   என பல்வேறு கோஷங்களுடன் உதுவனகந்த பகுதியில் இருந்து கேகாலை நகரை நோக்கி பிரதான வீதியை ஆக்கிரமித்து பாதயாத்திரை முன்னேறியது. 

இன்று பிற்பகல் 1.45 மணியளவில் கேகாலை நகரை அண்மித்த பாதயாத்திரைக்கு ஆதரவாளர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

பாதயாத்திரையில் நடையாகவும் வாகனத்தில் ஏறியும் கலந்துகொண்ட மஹிந்த ராஜபக்ஷ பாதையின் இருமருங்கிலும் இருந்த மக்களுக்கு கைகளை அசைத்த வண்ணம் கலந்துக்கொண்டார்.

கேகாலை நகர் முழுவதுமாக போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தநிலையில் மெதுவாக இரண்டாம் நாளுக்கான இறுதி இருப்பிடமான நெலுந்தெனிய நோக்கி பாதயாத்திரை மாலை 6.10 மணியளவில் சென்றடைந்தது.

 

வாகனநெரிசலும் தன்சலும்

கேகாலை நகரில் பொலிசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். 

குறிப்பாக போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக மாற்று வழிகளில் வாகனங்களை திருப்பி அனுப்பினர். 

பாடசாலைவிடும் நேரம் என்பதால் முழு அளவில் சனநெருக்கடியில் கேகாலை நகர் நிறைந்தது. அதேபோன்று பாதயாத்திரையில் கலந்துக் கொண்டவர்களுக்கு தன்சல் வழங்கப்பட்டது. கடலை மற்றும் பாணங்கள் வழங்கப்பட்டமை இன்றைய நாளில் முக்கியமானதாக அமைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17