பாறை துகல்களை எடுத்து வர சீனா அனுப்பிய விண்கலம் நிலவில் தரையிறங்கியது

Published By: Digital Desk 3

02 Dec, 2020 | 04:58 PM
image

சீனா முதல் முறையாக அனுப்பிய ஆளில்லா விண்கலம்  நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்கியுள்ளது.

குறித்த விண்கலம் மூலம் முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய உள்ளது. 

இதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை கடந்த 24 ஆம் திகதி  சீனா விண்ணில் செலுத்தியது.

அந்நாட்டின் ஹனைன் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 5 ரொக்கெட் மூலம் சேஞ்ச் 5 விண்கலம் நிலவுக்கு புறப்பட்டது. 

நிலவில் இருந்து வெற்றிகரமாக பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலம், டிசம்பரில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலம் நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்கியுள்ளது.

தரையிறங்கும் மேற்பரப்பில் தரையிறங்கும் காட்சி  படங்களையும் சீன அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இந்த விண்கலம் மூலம் நிலவில் இதுவரை கால் பதிக்காத பகுதியான ‘ஓஷன் ஆப் ஸ்டார்ம்ஸ்’ என்ற பகுதியிலிருந்து 2 கிலோ பாறை துகல்ளை எடுக்க சீனா திட்டமிட்டுள்ளது.

சீனாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் அமெரிக்கா ரஷ்யாவிற்கு பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்யும் 3 ஆவது நாடு என்ற பெருமையை சீனா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்பிள், மெட்டா நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தது...

2025-04-24 15:54:20
news-image

பாகிஸ்தானில் பனிக்கடற்கரடிகளை பாதுகாக்க AI தொழில்நுட்பம்

2025-04-22 12:17:42
news-image

'புதிய நிறத்தை' கண்டுபிடித்த விஞ்ஞானிகள் 

2025-04-21 11:19:45
news-image

ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் முதல் முப்பரிமாண...

2025-04-15 09:32:38
news-image

ஜிப்லியால் சட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை...

2025-04-02 17:09:37
news-image

இந்தியாவில் 2 ஆயிரம் கிலோ மீற்றர்...

2025-03-31 12:39:07
news-image

எக்ஸ் தளத்தை விற்பனை செய்தார் எலான்...

2025-03-30 09:46:36
news-image

செயற்கை நுண்ணறிவால் பதற்றத்தை உணர முடியுமா...

2025-03-29 14:44:37
news-image

மறைந்துவிட்டதா சனியின் வளையங்கள்!?

2025-03-26 13:35:10
news-image

உரையாடல்களை நேரடியாக மொழிபெயர்க்கக்கூடிய ஏர்போட்கள் ;...

2025-03-19 12:17:11
news-image

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 20...

2025-03-15 19:00:33
news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23