ஒருதலைப்பட்ச வாதமும் வர்த்தக தற்காப்புக் கொள்கையும் இல்லாமல் போகவேண்டும் என்று ஜி - 20 இணையவழி உச்சிமகாநாட்டில் உரை

பெய்ஜிங், ( சின்ஹுவா); அதிகரித்துவரும் ஒருதலைப்பட்சவாதமும் ( Unilateralism) வர்த்தக தற்காப்புக்கொள்கையும் ( Protectionism) உலக கைத்தொழில் மற்றும் விநியோக சங்கிலித்தொடரை ( (Global industrial and supply chains) சீர்குலைக்கின்றன என்பதால் கொவிட் -19 தொற்றுநோயில் இருந்து உலக பொருளாதாரங்கள்  மீட்சிபெறவேணடுமானால், அந்த இரு அணுகுமுறைகளும் இல்லாமல் போகவேண்டும்.

இவ்வாறு அண்மையில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஜி - 20  நாடுகளின் இணையவழி உச்சிமகாநாட்டுக்கு பெய்ஜிங்கில் இருந்து ஆற்றிய உரையில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கூறினார்.

உலக பொருளாதாரங்களை மீட்டெடுக்கும் இலக்கை நோக்கி முன்னெடுக்கப்படவேண்டிய நான்கு செயன்முறைகளை அவர் முன்வைத்தார் ;

(1)  கொவிட்-19 க்கு எதிராக உலக தடுப்புச்சுவரை நிர்மாணித்தல்

" நாம் முதலில் எமது நாட்டில் நோயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டவரவேண்டும்.பிறகு அதன் அடிப்படையில் உதவி தேவைப்படுகின்ற நாடுகளுடன் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தவேண்டும். ஜி - 20 அமைப்பின் பல நாடுகள் தடுப்புமருந்து ஆராய்ச்சியிலும் மேம்படுத்தலிலும் தயாரிப்பிலும் முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றன. வளங்களைத் திரட்டி ஒன்றுகூட்டுவதிலும் தடுப்பு மருந்து நியாயமான வழியில்  பயனுறுதியுடைய முறையில்  விநியோகிக்கப்படுவதிலும் உலக சுகாதார நிறுவனத்துக்கு ஆதரவளிக்க எமது செயற்பாடுகளை துரிதப்படுத்தவேண்டும். கொவிட் - 19 தடுப்பு மருந்துகள் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு  சீனா சுறுசுறுப்பான ஆதரவை வழங்குகிறது. அத்துடன் அதில் பங்கேற்கவும் செய்கிறது.

"கொவக்ஸ் திட்டத்தில்  இணைந்திருக்கும் நாம் தடுப்பு மருந்து ஆராய்ச்சி, தயாரிப்பு மற்றும் விநியோகத்தில்  ஏனைய நாடுகளுடன் ஒத்துழைப்பதற்கும் தயாராயிருக்கிறோம்.( கொவக்ஸ் திட்டம் (COVAX facility) என்பது உயர்ந்த வருமானமுடைய 64 நாடுகள் இணைந்து கொவிட்-19 தடுப்புமருந்தை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிப்பதற்கு முன்னெடுத்திருக்கும் ஒரு உலகளாவிய ஒரு  செயன்முறையாகும்). ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஆதரவு அளித்து உதவுவதில் எமது கடப்பாட்டை நாம் மதித்துச் செயற்படுவோம்.உலகம் பூராவும் உள்ள மக்களுக்கு கட்டுப்படியாக்க முறையில் எளிதாக தடுப்பு மருந்து கிடைக்கச்செய்வதற்காக நாம் பாடுபடுவோம்".

(2) விநியோக சங்கிலியை பேணுதல்

வைரஸை கட்டுப்படுத்துகின்ற அதேவளை, உலகளாவிய கைத்தொழில் மற்றும் விநியோக சங்கிலிகள் பாதுகாப்பாகவும் சிக்கல்கள் இல்லாமலும் செயற்படுவதை நாம் உறுதிசெய்துகொள்ளவேண்டும். வரிகளையும்  தடைகளையும் குறைத்து முக்கியமான மருத்துவ விநியோக வர்த்தகத்தை தாராளமயமாக்குவதற்கான வழிவகைகளை நாம் ஆராயவேண்டும்.கொள்கைகளையும்  தராதரங்கள் மற்றும் நியமங்களையும் மேலும் ஒருங்கிசைவானவையாக்கி அதிகாரிகளினதும் பணியாளர்களினதும் சீரான இயக்கத்துக்கு வசதியாக " துரித  செயல்வழிகளை " ( Fast tracks ) நாம் ஏற்படுத்தவேண்டியது அவசியமாகும். அதிகாரிகளினதும் பணியாளர்களினதும் இயக்கத்தை வசதிப்படுத்தவதற்கு    நிறுவனமயப்பட்ட ஒத்துழைப்பையும் உலகளாவிய ஒத்துழைப்பு வலையமைப்பையும் கட்டியெழுப்பும் செயன்முறைகளில் ஜி - 20 நாடுகளுக்கு நாம் ஒத்துழைப்போம்.

(3) எண்ணிம பொருளாதாரத்தை பயன்படுத்தல் 

கொவிட் - 19 புதிய தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சியையும் புதிய  வர்த்தக வடிவங்கள், 5ஜி போன்ற புதிய  தளங்கள், செயற்கை விவேகம் (Artificial intelligence) மற்றும் நேர்த்தியான நகரங்களையும்  ( Smart cities) தீவிரப்படுத்தியிருப்பதுடன் இணையவழி பொருள்கொள்வனவு, இணையவழிக் கல்வி ( Online education), தொலைப்பேசி மூல மருத்துவம் ( Tele medicine ) போன்ற நேரடித் தொடர்பில்லாத  பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தியிருக்கிறது.

மாற்றத்துக்கு எங்களை பழக்கப்படுத்திக்கொண்டு நாம் நெருக்கடிகளை வாய்ப்புக்களாக மாற்றவேண்டும்.விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் எண்களைப் பயன்படுத்தி தகவல்களையும் தரவுகளையும் புலப்படுத்துகின்ற தொழில்நுட்ப (  எண்ணிம தொழில் நுட்பம் - Digital transformation) மாறுதல் ஆகியவற்றின் ஊடாக கட்டமைப்புச் சீர்திருத்தங்களை ஆழமாக்கவும் வளர்ச்சி ஊக்கிகளை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும்.எண்ணிம பொருளாதார அபிவிருத்தியைச் (Digital economy) சாத்தியமாக்கக்கூடியதும் தரவுப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும்  எண்ணிம உட்கட்டமைபபுக்களை பலப்படுத்தவும் சகல நாடுகளையும் சேர்ந்த உயர்தொழில் நுட்ப கம்பனிகளின் செயற்களத்தை சமப்படுத்தவும் எம்மால் முடியும்.

அதேவேளை,  எண்ணிம பொருளாதாரத்தினால் தொழில்வாய்ப்புக்கு, எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்கள் குழுக்களுக்கு, தோற்றுவிக்கப்பட்டிருக்கும் சவால்களை கையாளவேண்டிய தேவை இருக்கிறது.எண்ணிம பிளவை (Digital divide ) நிறுவவும் வேண்டும்.

(4)கடன் மீளச்செலுத்துதல் இடைநிறுத்தம்

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்கவேண்டும் ; அந்த நாடுகள் தொற்றுநோயின் விளைவான இடர்பாடுகளில் இருந்து விடுபடுவதற்கு நாம் உதவவேண்டும்.சீனாவுக்கு பல சிக்கல்கள் இருக்கின்ற போதிலும், அது கடன் மீளச்செலுத்தல் இடைநிறுத்த திட்டத்தை ( Debt Service Suspension Initiative - DSSI) முழுமையாக நடைமுறைப்படுத்ததுகிறது ; மற்றைய நாடுகள் சீனாவுக்கு திருப்பிச்செலுத்தவேண்டிய கடனில் 130 கோடி டொலர்களை மீளப்பெறுவதை ஒத்திவைத்திருக்கிறது.கடன் மீளச்செலுத்துதல் இடைநிறுத்த திட்டத்தை நீடிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை  சீனா ஆதரிக்கிறது.அத்துடன் அதன் முழுமையான நடைமுறைப்படுத்தலுக்காக மற்றைய தரப்புகளுடன் தொடர்ந்து ஒத்துழைத்துச் செயற்படும்.

அதேவேளை, குறிப்பிட்ட  சிக்கல்களை எதிர்நோக்குகின்ற  நாடுகளிடமிருந்து கடனை மீளப்பெறுவதை இடைநிறுத்தல் மட்டத்தை அதிகரிக்கப்போகும் சீனா தன்னார்வ அடிப்படையிலும் சந்தை கோட்பாடுகளுக்கு இணங்கவும் புதிய நிதி ஆதரவை இந்த நாடுகளுக்கு வழங்குமாறு நிதிநிறுவனங்களை ஊக்குவிக்கும்.

தொற்றுநோயின் இருளில் இருந்து பெண்கள் வெளியே வந்து தங்களது விசேட தேவைகளைக் கவனிக்கவும் பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான தளத்தை (Beijing Declaration & Platform for Action ) நடைமுறைப்படுத்த நாம் அவர்களுக்கு உதவவேண்டும்.கொவிட்டுக்கு பின்னரான யுகத்தில் பெண்களின் மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்வதற்காக 2025 ஆம் ஆண்டில் ' பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் ' ( Meeting on Gender Equality & Women's Empowerment ) தொடர்பான இன்னொரு உலகத்தலைவர்கள் மகாநாட்டைக் கூட்டவேண்டும் என்று சீனா யோசனை முன்வைத்திருக்கிறது.

உணவுப் பாதுகாப்பு சவாலை(Food security) பாரதூரமானதாக எடுக்கவேண்டியதும் அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் நடத்தவிருக்கும் உணவு முறைமைகள் உச்சிமகாநாட்டுக்கு (Food Systems Summit ) ஆதரவளிப்பதும் முக்கியமானதாகும். இது விடயத்தில்,  நாளடைவில் உணவு இழப்பு மற்றும் விரயம் தொடர்பில் சரவதேச மகாநாட்டை (International conference on food loss and waste) நடத்தவேண்டும் என்று சீனா யோசனை முன்வைப்பதுடன் ஜி - 20 நாடுகளும் பொருத்தமான சர்வதேச நிறுவனங்களும் இதில் தீவிர பங்கேற்கவேண்டும் என்று அழைக்கிறது.

பல்தரப்பு ஒழுங்குமுறையை ஆதரித்தல்

கொவிட்டின் பாரதூரமான சவால்கள் உலக ஆட்சிமுறையின் (Global governance) குறைபாடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது.கொவிட்டுக்கு  பின்ரான சர்வதேச ஒழுங்குமுறையிலும்) International order) உலக ஆட்சிமுறையிலும் ஜி -- 20 க்கான எதிர்கால வகிபாகம் ஆகியவை குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பான அக்கறை கொண்டிருக்கிறது.எனது அபிப்பிராயத்தில்   get கலந்தாலோசனைகள், கூட்டுப் பங்களிப்பு மற்றும் பொதவான பயன்கள் கோட்பாடு எமது முன்னோக்கிய பயணத்தை வழிநடத்தவேண்டும்.பல்தரப்பு ஒழுங்கு முறையை நாம் உறுதியாக கடைப்பிடித்து (Openness) திறந்தபோக்கு, சகலதரப்புகளையும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையையும் பின்பற்றவேண்டும்.அத்துடன் பரஸ்பரம் பயன்தருகின்ற ஒத்துழைப்பை மேம்படுத்தி காலத்தின் போக்கிற்கு ஈடுகொடுத்து செயற்டவேண்டும்.இந்த செய்முறைகளில் ஜி --20 பெரியதொரு பங்கையாற்ற கடமைப்ட்டிருக்கிறது.

ஐ.நா.வை மையப்படுத்திய சர்வதேச ஒழுங்கு 

சர்வதேச விவகாரங்களை ஒத்துழைப்பின் ஊடாக கையாளுவதற்கான மைய நிறுவனமே ஐக்கிய நாடுகள். அதன் அதிகாரத்துக்கும் மதிப்புக்கும் உறுதியான ஆதரவை சகல நாடுகளும் வழங்கவேண்டும்.ஐ.நா.வின் சாசனத்தின் நோக்கங்களையும் கோட்பாடுகளையும்  பின்பற்றி, சர்வதேச சடடத்தை ஆதாரமாக்கொண்ட சர்வதேச ஒழுங்கை உறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டும்.உலகளாவிய கருத்தொருமிப்பை  பெருமளவுக்கு பயனுறுதியுடைய முறையில் கட்டியெழுப்புவதிலும் உலகளாவிய வளங்களை ஒன்றுதிட்டுவதிலும் உலகளாவிய செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதிலும் ஐ.நா.வுக்கு நாம் ஆதரவளிப்போம்.உலக அமைதி, சமாதானத்தை யும் அபிவிருத்தியையும்  மேம்படுத்துவதில் ஐ.நா.வின் மிகப்பெரிய வகிபாகத்துக்கு நாம் ஆதரவளிக்கவேண்டும்.

அனைத்தையும் உள்ளடக்கிய உலகமயமாக்கம்

இரண்டாவதாக, பொருளாதார உலகமயமாக்கலுக்கான ஆட்சிமுறைக் கட்டமைப்பை நாம் மேம்படுத்தவேண்டியது அவசியமாகும்.சட்ட முறைப்படியான--  ஔிவுமறைவற்றதும் பாரபட்சமற்றதுதுமான   பல்தரப்பு வாணிப முறைமையை ( திறந்ததாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டும் ) நாம் உறுதியாகப் பேணிப்பாதுகாக்கவேண்டும்.சுதந்திர வர்த்தகத்தை நாம் மேம்படுத்தி, இருதலைப்பட்சவாதத்தையும்  வர்த்தக தற்காப்புக் கொள்கையையும் எதிர்த்து, நியாயமான போட்டியை உறுதியாக ஆதரித்து நாம் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்தி உரிமைகளை மேம்படுத்தவேண்டும்.

சர்வதேச நிதிமுறைமையின் சீர்திருத்தங்களை நாம் தொடரவேண்டும்.பொருளாதார உலகமயமாக்கலுக்கு ஏற்படுகின்ற சவால்களை நேருக்குநேர் முகங்கொடுத்து கையாளவேண்டும் ; உலகமயமாக்கலை பெருமளவுக்கு திறந்ததாகவும் அனைத்தையும் உள்ளடக்குவதாகவும் சமநிலையானதும் சகலருக்கும் பயன்தரத்தக்கதாகவும் ஆக்கவண்டும்.

சி ஜின்பிங் தனது உரையை சீனக்கவிதையொன்றை மேற்கோள் காட்டி நிறைவு செய்தார் ; " மாண்டுபோன கப்பலொன்றைக் கடந்து ஆயிரம்கப்பல்கள் பயணம் செய்யும். ஒரு மரம் பட்டுப்போனால, பத்தாயிரம் மரங்கள் தளிர்க்கும்".

 " கொவிட் -- 19 முடிவுக்கு வரும்போது எமத உலகம் தொற்றுநோயில் இருந்து விடுபட்டு மேலும் பலம்பொருந்தியதாக ளெிக்கிளம்பும் என்று நான் நம்பகிறேன்.அந்த உணர்வின் அடிப்படையில்,எமது மக்களுக்கு சிறப்பான ஒரு வாழ்வைக்கொடுப்பதற்கும் மனித குலத்துக்கு  பொதுவான எதிர்காலமொன்றுடனான சமுதாயமொ்றை  கட்டியெழுபப்பவும் கரம் கோர்ப்போம் என்று  சீன ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.