ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் விரைவாக 12 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை இந்திய அணித் தலைவர் விராட் கோலி புரிந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பராவில் ஆரம்பமான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போதே விராட் கோலி இந்த சாதனையை புரிந்துள்ளார்.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் விராட் கோலிக்கு இந்த சாதனையை புரிய 23 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இந் நிலையில் 13 ஆவது ஓவருக்காக சீன் அபோட் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள, அந்த  ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி இந்த சாதனையை புரிந்துள்ளார்.

ஒருநாள் அரங்கில் 12 ஆயிரம் ஓட்டங்களை குவிப்பதற்கு விராட் கோலிக்கு மொத்தமாக 242 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டில் செஞ்சுரியனில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது 12 ஆயிரம் ஓட்டங்களை சச்சின் டெண்டுல்கர் பெற்றார். இதற்காக சச்சினுக்கு 300 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. 

இந் நிலையில் விராட் கோலி 242 இன்னிங்ஸ்களில் மாத்திரம் 12 ஆயிரம் ஓட்டங்களை பெற்று, சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

Innings to 12000 ODI runs

242 V KOHLI

300 S Tendulkar

314 R Ponting

336 K Sangakkara

379 S Jayasuriya

399 M Jayawardene