( எம்.எப்.எம்.பஸீர்)

உறவினர்கள், பொறுப்பாளர்கள் கையேற்க  முன்வராத, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நபர்களின்  சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொவிட் தொற்றினால் உயிரிழந்த சிலரின் சடலங்களை பொறுப்பேற்க எவரும் முன்வராத நிலையில் பல சடலங்கள் வைத்தியசாலை பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்,  உடனடியாக சுகாதார மற்றும் சட்ட ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட்டு, அரச செலவில் சடலங்களை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் ஏற்படும் செலவினங்களை,  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம்  மேஜர் ஜெனரால் சுனந்த ரணசிங்க தெரிவித்தார்.