ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் திகதியன்று சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இந்த ஆண்டு ‘உலகளாவிய ஒற்றுமை, பொறுப்பு பேரிடர் காலங்களில் அவர்களை அரவணைத்து, அவர்களின் துயரங்களை பகிர்ந்து கொள்தல்’ என்ற மையக்கருத்தை விழிப்புணர்வாக கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகளவில் எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோயால் தோராயமாக 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாத் தொற்று காலகட்டத்திலும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிகிச்சைகளை மருத்துவர்கள், தாதியர்கள், தன்னார்வளர்கள், தொண்டு நிறுவனங்களும்,  மருத்துவ ஊழியர்களும் வழங்கி வருகிறார்கள்.

தவறான பாலுறவு, பரிசோதனை செய்யப்படாத அசுத்த ரத்தம், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள்...என பலருக்கு எய்ட்ஸ் நோய் என்னும் உயிர்க்கொல்லி நோய் ஏற்படுகிறது. 

உயிர்க்கொல்லி நோயான இதனை தொடக்க நிலையில் கண்டறிந்தால், ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை மூலம் தொடர்சிகிச்சை பெற்றால் குணமடையலாம்.

அதே தருணத்தில் எம்முடைய குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு எய்ட்ஸ் நோய் பாதித்தால், அவர்களை தொடுவதன் காரணமாக இந்நோய் பரவுவதில்லை. 

அதனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிப்பதுடன், அவர்களை அரவணைத்து சிகிச்சை பெற வலியுறுத்தினால், அவர்களுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.