மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட களேபரத்தில் படு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை முதல் அந்த சிறை வளாகத்தில் இடம்பெற்ற களேபர நிலைமைகளினால் இதுவரை 11 சிறைக் கைதிகள்  உயிரிழந்துள்ளார்கள்.

இவர்களில் மூன்று பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்கள்.

அத்துடன் இந்த  களேபர நிலைமையால் 107 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.