(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலையின் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கு ஒன்றரை மாத காலத்துக்குள் 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

சிறந்த கொள்கை திட்டங்களை வகுக்காமலே அரசாங்கம் பொதுபோக்குவரத்து சேவையினை மீள ஆரம்பித்துள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயவர்தன தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தனியார் பேருந்து சேவையில் ஈடுப்பட்ட 50 ஆயிரமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் தனியார் பேருந்துகள் நாளாந்தம் சேவையில் ஈடுப்பட்டாலும் பொருளாதார மட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலையான கொள்கை திட்டம் வகுக்கப்படாமல் பொதுபோக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனியார் உரிமையாளர் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வு வழங்கவில்லை என்றார்.