கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்து காணப்படுவதால் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளிலே குரங்குகள் அங்குமிங்கும் பாய்ந்து தொல்லை கொடுப்பதாக தெரியவருகிறது.

அத்துடன், பாடசாலைகளில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் குரங்குகள் சுதந்திரமாக ஊஞ்சல்களில் விளையாட்டி வருகின்றன.