(இராஜதுரை ஹஷான்)

களுத்துறையில் புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதியமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நீதிமன்ற செயற்பாடுகள் தொல்பொருள் பழமை வாய்ந்த இடம் மற்றும் கட்டடத்தில்  முன்னெடுக்கப்பட்டு செல்லப்படுவதுடன் புதிய கட்டடத்துக்காக 1,064 ஹெக்டயர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியை நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.