(இராஜதுரை ஹஷான்)

பாடசாலை மாணவர்களுக்கு  சுரக்‌ஷா காப்புறுதி வழங்கும் திட்டத்துக்கான விலை மனுகோரலை  இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு வழங்க  கல்வி அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு சுரக்‌ஷா காப்புறுதி வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு சொந்தமான காப்புறுதி சேவை வழங்குனர்களிடம் மும்மொழிவுகள் கோரப்பட்டன.

இதற்கமைய இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மாத்திரம் மும்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இம்மொழிவு குறித்து கலந்துரையாடப்பட்டு, பின்னர் அமைச்சரவையால் முன்வைக்கப்பட்ட பெறுகை குழுவின் பரிந்துரைக்கு அமைய சுரக்‌ஷா காப்புறுதி வழங்குவதற்கான விலை மனு கோரலை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.