பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் கீழ் சுற்றுச்சூழல் சட்டங்கள் தளர்த்தப்பட்ட நிலையில், அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு 11,000 சதுர கிலோமீட்டரை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளன.

2008 ஆம் ஆண்டிலிருந்து காடழிப்பு மிக மோசமான விகிதத்தை எட்டியதாகவும் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

'PRODES' எனப்படுத் தேசிய காடழிப்பு காண்காணிப்பு திட்டம் 12,911 சதுர கிலோ மீட்டார் காடழிப்பை பதிவு செய்ததுள்ளது.

இதில் மரான்ஹோ மாநிலத்தின் மேற்குப் பகுதி மற்றும் ஏக்கர், அமபே, அமேசானாஸ், மேட்டோ க்ரோசோ, பாரே, ரோண்டேனியா, ரோரைமா மற்றும் டோகாண்டின்ஸ் ஆகிய மாநிலங்களின் முழு நிலப்பரப்பும் அடங்கும்.

அதேநேரம் 2019 ஆகஸ்ட் முதல் 2020 ஜூலை வரை அமேசனில் காடழிக்கப்பட்ட பகுதி 11,088 சதுர கீலோ மீற்றர் ஆகும் என்று தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி இந்த தரவுகள் சேமிக்கப்பட்டுள்ளன.

இது முந்தைய காலத்தைவிட (2018 ஆகஸ்ட் முதல் 2019 ஜூலை வரை) 9.5 சதவீத அதிகரிப்பு ஆகும்.