அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றியிலக்காக 268 ஒட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

நேற்றைய ஆட்டநேர முடிவின்போது 282 ஒட்டங்ளுக்கு 6 விக்கட்டுகளை இழந்த நிலையில் இன்று ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி 353 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் 176 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில், ஹேரத் 35 ஒட்டங்களை பெற்றுகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் தற்போது துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளைக்கு முன்னர் 3 விக்கட்டுகளை இழந்து 83 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற வேண்டுமானால் இன்னும் 7 விக்கட்டுகள் கைவசம் இருக்க 185 ஒட்டங்களை பெற வேண்டும்.