வெளிநாடுகளில் விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளினால் சிக்கியிருந்த 149 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அந்தவகையில் கட்டாரில் இருந்து 95 பேரும் , ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 49 பேரும் , ஜேர்மனியிலிருந்து 05 பேருமே இவ்வாறு இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில் விமான நிலையத்தை வந்தடைந்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.