தமிழ் திரை உலகின் மூத்த நடிகரான சிவக்குமாருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

தமிழ் திரை உலகின் மூத்த நடிகர்களில் ஒருவரும், இதிகாச சொற்பொழிவாளருமான நடிகர் சிவக்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும், அவர்  சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், நடிகர் சிவக்குமார் சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது...

சிவகுமாருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும், அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் வீட்டில் அவர் ஆரோக்கியமாக இருப்பதை எடுத்துக் காட்டும் வகையில் செல்ஃபி எடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

இதன்மூலம், நடிகர் சிவக்குமாருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இதனால் அவருடைய ரசிகர்களும், சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.