மழையால் மூன்றாவது போட்டி இரத்து ; தொடர் நியூஸிலாந்து வசம்

Published By: Vishnu

01 Dec, 2020 | 11:01 AM
image

நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரை நியூஸிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையிலேயே மூன்றாவது போட்டி இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது மூன்று இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டிகளில் பலப்பரீட்சை நடத்துகின்றது.

அதன்படி மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்று மவுன்ட் மாங்கானுவில் ஆரம்பமானது.

போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கியது.

நேற்றைய ஆட்டத்தில் டிம் சவுதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்ததால் நியூசிலாந்து அணியின் தலைமைப் பொறுப்பை மிட்செல் சான்ட்னெர் ஏற்றார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி துடுப்பெடுத்தாடிவரும் போது 2.2 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டது. அதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்தும் மழை பலமாக பொழிந்தமையினால் போட்டியை இரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். 

அதனால் ஏற்கனவே முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று  2-0 என்ற கணக்கில் இருந்த நியூஸிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. 

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் தொடர்நாயகனுக்கான விருதினை பெற்றார்.

இதேவேளை இவ்விரு அணிகளுக்டையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரின் முதல் போட்டி ஹாமில்டனில் நாளை மறுதினம் ஆரம்பமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21