பெருந்தோட்டங்களில் கொரோனா வைரஸ் பரவினால் கட்டுப்படுத்த மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும் - வடிவேல் சுரேஷ்

Published By: Digital Desk 3

01 Dec, 2020 | 11:14 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பெருந்தோட்டங்களில் கொரோனா வைரஸ் பரவினால் அதனை கட்டுப்படுத்த மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். இப்போது தவறிழைத்தால் பின்னர் கொரோனா தாக்கத்தின் விளைவுகளை  கடவுளாலும் காப்பாற்ற முடியாது போய்விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  வடிவேல் சுரேஷ் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

மலையகத்தை பொருத்தவரையில் இதற்கு முன்னர்  இருந்த நிலைமைகளை விடவும் 15 வீதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்  இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆட்சியில் வைத்திசாலைகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஒரு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் சுகாதார துறையை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பெருந்தோட்ட துறை வைத்தியசாலைகளின் தரத்தை  உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் மொழி பிரச்சினையை கருத்தில் கொண்டு அதற்கான தீர்வுகளையும் வழங்க வேண்டும்.

பெருந்தோட்டங்களில் கொரோனா வைரஸ் பரவினால் அதனை கட்டுப்படுத்த மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். அங்குள்ள மக்களின் நிலைமைகள், பொது மலசலகூடம், தோட்டங்களில் கூட்டமாக பணிபுரிதல் என்பவற்றை கருத்தில் கொண்டு உடனடியாக ஆரோகியமான கட்டமைப்பு உருவாக்க வேண்டும்.

இப்போது தவறிழைத்தால் பின்னர் கொரோனா பரவியதன் விளைவுகளை  கடவுளாலும் காப்பாற்ற முடியாது போய்விடும். எனவே சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் உடனடியாக கொரோனா தடுப்பு தெளிவூட்டல் நிகழ்வுகள் உருவாக்கி, கசிப்புகள், மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையகத்தில் மதுபானசாலைகளில் அனுமதி அதிகமாகும். அதனை நிறுத்தியாக வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29