மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் கலவரத்தில் காயமடைந்து ராகம, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 38 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.