நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (30.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திம்புள்ள – பத்தனை, லிந்துலை, பூண்டுலோயா, தலவாக்கலை மற்றும் அக்கரப்பத்தனை ஆகிய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த அறுவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து வந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அறுவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
பூண்டுலோயா, மல்தெனிய பகுதியில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள 44 வயதுடைய நபர் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு புளுமெண்டல் பகுதியிலிருந்து வந்துள்ளார். இவரிடம் கடந்த 28 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
புறக்கோட்டையில் மொத்த வியாபார விற்பனை நிலையமொன்றில் தொழில்புரிந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி திம்புள்ள - பத்தன பொலிஸ் பிரிவிலுள்ள குயின்ஸ்பேரி தோட்டத்துக்கு வந்த 36 வயது நபரொருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவல் தோட்டத்தில் வலகா பிரிவு மற்றும் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூமூட் தோட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் இருவரும் கொழும்பில் இருந்தே வந்துள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரின்டன் தோட்டத்திலும் இரு இளைஞர்களுக்கு வைரஸ் தொற்று பி.சி.ஆர் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் கொழும்பு துறைமுகத்தில் வேலை செய்துள்ளார். ஏனையவரும் கொழும்பில் தொழில் புரிந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM