யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெளியன்தோட்டம் உடுப்பிட்டியில் நேற்றிரவு மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மகேசன் தவம் (வயது-55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
“நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், நாக பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து அதனை அயலில் உள்ள வளவில் வீசிவிட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார்.
தூக்கத்தால் திடீரென எழுந்த அந்த நபர், நெஞ்சு வலிப்பதாக தெரிவித்து குடிதண்ணீர் கேட்டுள்ளார். 3 செம்பு குடிதண்ணீரை அருந்திய அவர், நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவர் பருத்தித்துறை – மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது கையில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுகின்றது” என்று ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM