(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கும் ஷானி அபேசேகரவிற்கு அவசியமான சிகிச்சை வசதிகள் அனைத்தையும் பெற்றுக்கொடுப்பதுடன் அவரது பாதுகாப்பை உறுதிசெய்வது அதிகாரிகளின் கடமையாகும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அவருடைய அடிப்படை உரிமைகள் ஒருபோதும் மீறப்படக்கூடாது என்றும் முன்னாள் சபாநாயகர் வலியுறுத்தியிருக்கிறார்.

கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.

மிகச்சிறந்த புலனாய்வு அதிகாரியாக பிரபல்யம் பெற்ற ஷானி அபேசேகர, சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அவருக்கு அவசியமான சிகிச்சை வசதிகள் அனைத்தையும் பெற்றுக்கொடுப்பதுடன் அவரது பாதுகாப்பை உறுதிசெய்வது அதிகாரிகளின் கடமையாகும். அவருடைய அடிப்படை உரிமைகள் ஒருபோதும் மீறப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.