(நா.தனுஜா)
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையில் 'நெல்சன் மண்டேலா சட்டத்தை' அமுல்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து 8 பேர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலர் காயமடைந்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை மற்றும் அதனால் கைதிகள் சிலர் மரணமடைந்துள்ளமை தொடர்பில் வெளியான செய்திகள் குறித்து அவதானம் செலுத்தியிருக்கிறோம். உரிய விசாரணைகளின் ஊடாக இச்சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களையும் சிறைச்சாலை ஊழியர்களையும் பாதுகாப்பதற்கு தந்போதைய நிலைவரம் பற்றி ஆராயப்படுவது அவசியமாகும். இந்நிலையில் 'நெல்சன் மண்டேலா' சட்டத்தை' அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு உதவ ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM