பாகிஸ்தான்  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 40 பேர் உயிரிழந்ததையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  8,025 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 2,839 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 398,024 ஆக உயர்வடைந்துள்ளது.

பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தான் ஆகிய மாகாணங்களை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக சிந்து மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளில் சிந்து மாகாணத்தை பஞ்சாப் மாகாணம் முந்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்து மாகாணத்தில் 173,014 பேரும், பஞ்சாப் மாகாணத்தில்119,035 பேரும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 47,190 பேரும், பலூசிஸ்தான் மாகாணத்தில் 17,158 பேரும், தலைநகர் இஸ்லாமாபாத்தில் 30,123 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 6,855 மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கில்கிட்-பால்டிஸ்தானில் 4,649 பேரும் போதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதேவேளை,பஞ்சாப் மாகாணத்தில் 2,991 பேரும், சிந்து பஞ்சாப் மாகாணத்தில் 2,924 பேரும், கைபர் பக்துன்க்வா 1,368 பேரும், பலூசிஸ்தானில் 166 பேரும், இஸ்லாமாபாத்தில் 314 பேரும், கஷ்மீரில் 165 பேரும் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானில் 97 பேரும் உயிரிழந்துள்ளனர்.