யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் , மாசிலாமணி தவச்செல்வம் என்ற இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவரது சடலம் நேற்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டது.

இதையடுத்து மற்றையவரான மாசிலாமணி தவச்செல்வமிம் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரது சடலங்களும் உடல்கூறாய்வு பரிசோதனைக்காக  தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.