மன்னாரிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியா செல்ல முயன்ற 7 பேர் கடற்படையினரால் கைது

Published By: J.G.Stephan

30 Nov, 2020 | 01:37 PM
image

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில்  கடல் வழியாக படகு மூலம் தப்பித்துச் செல்ல முற்பட்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கடற்படையினரினால் கடந்த சனிக்கிழமை மாலை பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமாக படகில் இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த 5 பேரும், அவர்களை அழைத்துச் சென்ற ஆட்கடத்தல்காரர்கள் இருவரும் மன்னார்– பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 29 வயது இளைஞர் ஒருவரும், 29 வயது யுவதி ஒருவரும், 38 வயதான பெண்ணொருவரும், 08 மற்றும் 09 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளுமே இவ்வாறு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-மேலும் 32 மற்றும் 37 வயதான பேசாலை பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்களே ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பேசாலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரனைகளின்  பின்னர் குறித்த 7 பேரூம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44