இன்றைய திகதியில் நீரிழிவால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவர்களது மார்பகங்களும் பாதிக்கப்படுகிறது. இதற்கு தற்போது சத்திரசிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது.

உலக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயை வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பெண்கள் காட்டும் அலட்சியமே அவர்களை Diabetic Mastopathy என்ற பாதிப்புக்குள்ளாகிறார்கள். 

இன்சுலின் சுரப்பில் ஏற்படும் சமச்சீரின்மை காரணமாக பெண்களுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்பால் அவர்களின் ஒன்று அல்லது இரண்டு மார்பகங்களிலும் கட்டிகள் உருவாகிறது. சில பெண்களுக்கு அவர்களது மார்பகங்கள் கடின தன்மையுடனும், பொலிவிழந்தும் காணப்படும். சிலருக்கு இதன் காரணமாகவே அவர்களின் மார்பகங்களில் அமைப்பும், வடிவமும் வேறுபடும். ஆண்களில் சிலருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டிருக்கிறது.

இன்சுலின் சுரப்பில் ஏற்படும் குறைபாடு அல்லது மாறுபாடு காரணமாக மார்பகங்களில் கட்டிகள் உருவாகிறது. இவை பல தருணங்களில் வலி இல்லாத- தற்காலிகமான கட்டியாகவே தோன்றுகிறது. உடனே எம்மில் பலரும் இது மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறியோ..! என அதிர்ச்சி அடைவர். இல்லை என்றாலும் பரிசோதனைகள் மூலம்  மூலமாகவும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி விடலாம். சத்திர சிகிச்சை செய்து கட்டியை அகற்றிய பின்னர் தொடர்ந்து 5 ஆண்டுகாலம் மருத்துவர்களின் கண்காணிப்பிலும், ஆண்டுதோறும் தவறாமல் மம்மோகிராம், எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையை தவறாது மேற்கொள்ள வேண்டும். 5 ஆண்டுகளுக்குப் பிறகும் இவை மீண்டும் வெளிப்பட வில்லை என்றால், இன்சுலின் சுரப்பில்  இயல்பான மாற்றங்கள் ஏற்பட்டு, இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டீர்கள் என பொருள் கொள்ளலாம். இருப்பினும் இத்தகைய பாதிப்புக்கு பின்னர் ஆண்டுதோறும் தவறாமல் நீரழிவு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

டொக்டர் நல்ல பெருமாள்.

தொகுப்பு அனுஷா.