முன்னாள் திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர வாக்குமூலமளிப்பதற்காக பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இன்று (29) ஆஜராகியுள்ளார்.

அமைச்சரவை தீரமானத்திற்கு எதிராக இந்தியா நிறுவனமொன்றிலிருந்து  1 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்து,  5 பில்லியன் ரூபா தொகையை அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில்  வாக்குமூலம் அளிப்பதற்காகவே இவர் அழைக்கப்பட்டுள்ளார்.