இந்தோனேசியாவில் ஐல் லெவோடோலோக் ( Ile Lewotolok ) என்ற எரிமலை வெடித்துள்ளது.

இதனை தொடர்ந்து எரிமலை வெடிப்பு  பகுதியின் அருகில் வசித்த சுமார் 3 ஆயிரம் பேர்  வெளியேறியுள்ளனர்.

படம் ; ஏ.எப்.பி

இந்தோனேசியாவில் ஈஸ்ட் நுஸா மாகாணத்தில் உள்ள ஐல் லெவொடோலாக் என்ற எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது.

எரிமலையில் இருந்து எழுந்த புகையும், சாம்பலும் சுமார் 4 கிலோ மீட்டர் உயரத்திற்கு விசிறியடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 26 கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

இந்தோனேசியா தீவில் சுமார் 260 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதன் இருபுறமும் பசிபிக் நெருப்பு வளையம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.