அமெரிக்காவில் கொரோனா தொற்று அடுத்த மாதம் புது உச்சத்தை தொடும் என தேசிய தொற்று நோய் நிறுவன தலைவர் எச்சரித்து உள்ளார்.

அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடி 30 இலட்சத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய தொற்று நோய் மற்றும் ஒவ்வாமை ஆராய்ச்சி நிறுவன தலைவர் அந்தோனி பாசி, அமெரிக்காவில் நடந்த நன்றி தெரிவிப்பு விடுமுறையால் கொரோனா விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டு உள்ளதாகவும் அதன் விளைவாக விரைவில் பெருந் தொற்று அதிகரிக்க கூடும் என்று தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் இதுவரை 266,873 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.