மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் பிற சட்ட அமுலாக்க அதிகாரிகளின் ஆதரவுடன் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.

அத்துடன் அமைதியின்மை குறித்து விசாரணை நடத்த சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 1,099 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக என்றும் இதன்போது அவர் கூறினார்.

வெலிகட சிறைச்சாலையில் 386 பேரும், மஹர சிறைச்சாலையில் 198 பேரும், பழைய போகம்பறை சிறைச்சாலையில் 175 பேரும், கொழும்பு விளக்கமறியில் சிறைச்சாலையில் 157 பேரும், மெகசின் சிறைச்சாலையில் 46 பேரும், குருவிட்ட சிறைச்சாலையில் 32 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.