முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவின் கையெழுத்தை பரிசோதனை செய்ய கொழும்பு நீதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் சஜின்வாஸ் குணவர்தனவின் கையெழுத்தை பரிசோதனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்ததனை தொடர்ந்து நீதவான் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

வர்த்தகர் ஒருவரை மிரட்டி 610 மில்லியன் ரூபா கப்பமாக பெற்ற குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை இன்று (29) இடம்பெற்ற நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை குறித்த வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த சஜின்வாஸ் கடந்த 8 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.