வளைகுடா பிரச்சினையை தீர்க்க ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய விஜயம்

Published By: Vishnu

30 Nov, 2020 | 12:05 PM
image

வளைகுடா நாடுகளுக்கிடையேயான மோதலைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளுக்காக வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னரும் அவரது குழுவும் இந்த வாரம் சவுதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், குஷ்னர் சவுதி நகர இளவரசர் முகமது பின் சல்மானை சவூதி நகரமான நியோமில் சந்திக்க உள்ளதாகவும், அதனையடுத்த நாட்களில் கட்டார் எமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை சந்திக்கவுள்ளதாகவும் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார்.

பல பிரச்சினைகளில் சமரசம் செய்து உடன்பாட்டை எட்டுமாறு சவுதி மற்றும் கட்டார் தலைவர்களை வற்புறுத்துவதற்கு குஷ்னர் ஆர்வமாக உள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோளிட்டு ஆக்ஸியோஸ் (Axios) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் இராஜதந்திர உறவுகள் மோசமடைந்த நிலையில் உள்ள நிலையிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இமத் மாத தொடக்கத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோபர்ட் ஓ’பிரையன், வளைகுடா நெருக்கடியைத் தீர்ப்பது தமது நிர்வாகத்தின் முன்னுரிமை என்றும், ஜனவரி மாதம் டிரம்ப் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பு அது நிகழ வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47