லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரு போட்டிகள் இடம்பெறவுள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் முதல் போட்டியில் வெற்றிகளை பதிவுசெய்த திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிகள் ஒன்றுடன் ஒன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணியும் ஷாஹித் அப்ரிடி தலைமையிலான காலி  கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதவுள்ளது.

இவ்விரு அணிகளும் எதிர்கொண்ட தனது முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளமையினால் முதல் வெற்றியை பெறும் நோக்குடன் ஒன்றுடன் ஒன்று மல்லுக் கட்டும்.

இதேவேளை தான் எதிர்கொண்ட முதலிரு போட்டிகளிலும் வெற்றியை பதிவுசெய்த அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணிக்கு இன்றைய தினம் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

ஓய்விலிருந்தபோதும் யாழ்ப்பணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் தம்புள்ளை வைக்கிங்ஸுக்கிடையேயான இன்றைய போட்டி முடிவு குறித்து கொழும்பு அணி உன்னிப்பாக அவதானிக்கும்.

காரணம் போட்டியில் வெற்றிபெறும் அணி தற்போது போனஸ் புள்ளிகள் அட்டவணையில் முன்னிலை வகிக்கும் கொழும்பு கிங்ஸை இரண்டாவது இடத்திற்கு தள்ளும் ஆற்றலைப் பெறும்.