பிரபாகரனின் பிறந்த தினம் தொடர்பான தகவல்களை முகநூலில் பதிவிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

By T Yuwaraj

30 Nov, 2020 | 04:32 PM
image

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுதல் மாவீரர் தினத்தை அனுஷ்டித்தல் தொடர்பான தகவல்களை முகநூலில் வெளியிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை (26.11.2020) மாலை கைது செய்யப்படட சந்தேக நபர்கள் நீதிமன்ற அனுமதியின் கீழ் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 29.11.2020 மாவட்ட பதில் நீதிவான் வி. தியாகேஸ்வரன் முன்னிலையில் சற்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களை டிசெம்பெர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் சித்தாண்டி, வந்தாறுமூலை கொம்மாதுறை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right