பிரான்ஸில் போராட்டம்; 98 பொலிஸார் படுகாயம்

Published By: Digital Desk 3

30 Nov, 2020 | 11:30 AM
image

பிரான்ஸில் புதிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக சனிக்கிழமை நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற போராட்டங்களின் விளைவாக 98 பொலிஸார் படுகாயமடைந்துள்ளார்கள்.

பிரான்ஸில் மோசமான நோக்கத்துடன் பொலிஸாரை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கும் வகையில் புதிய பாதுகாப்பு மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படும் என அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையே கடந்த வாரம் தலைநகர் பாரிஸில் கருப்பினத்தை சேர்ந்த இசைக் கலைஞர் ஒருவரை வெள்ளையின பொலிஸ் அதிகாரிகள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சர்ச்சைக்குரிய இந்த பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் பொலிஸாரின் மிருகதனத்தை காட்டும் இது போன்ற சம்பவங்களை அம்பலப்படுத்த முடியாமல் போகும் என மசோதா எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்

இந்நிலையில், இந்த பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.

பொலிஸார் மீது கற்கள், கண்ணாடி போத்தல்ல்கள் மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். ஆனால் பாரிஸ் நகரம் முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது. இந்த வன்முறையில் 98  பொலிஸார் படுகாயம் அடைந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17