நடிகரும், தயாரிப்பாளருமான ஆர். கே. சுரேஷ் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'காடுவெட்டி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'காடுவெட்டி' என பெயரிடப்பட்டிருக்கிறது. விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை வாய்ந்தவரும், 'தாரை தப்பட்டை', 'மருது' ஆகிய படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவருமான ஆர்கே சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். 

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். இன்று படப்பிடிப்புடன் தொடங்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதனிடையே நடிகர் ஆர்.கே. சுரேஷ்  'விசித்திரன்' என்ற திரைப்படத்திலும் , மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஜோசப்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.