வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பயங்கரவாத குழுவினால் குறைந்தது 110  விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெறும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களே இவ்வாறு  மோட்டார் சைக்கிள்களில் ஆயுதமேந்திவந்த குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களின் மனைவி மற்றும் மகள்கள் தீவிரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.

Villagers in Borno buried the victims on Sunday while security forces hunted for the dozens still missing with up to 70 people feared dead

ஆரம்ப கட்டதாக்குதலில் 43 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சனிக்கிழமை மேலும் 70 பேர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களை ஞாயிற்றுக்கிழமை பிரதேச வாசிகள் அடக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னணியில் போகோ ஹராமா எனப்படும் தீவிரவாத குழு செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அதனை அவர்கள் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

The attack is believed to have been carried out by Boko Haram although they are yet to claim responsibility

இவ் கொடூரமான தாக்குதல் குறித்து, நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்துடன் 'இந்த கொலைகளால் முழு நாடும் காயமடைந்துள்ளது.' என தெரிவித்துள்ளார்.

 நைஜீரியாவில் போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவமும், அரசு ஆதரவு பெற்ற குழுக்களும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அரசு படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

The farmers were reportedly rounded up and summarily killed by armed insurgents with at least 30 people beheaded

அரசுப்படையினருக்கு ஆதரவாக இருப்பதாவும், ரகசிய தகவல்கள் அனுப்புவதாகவும் கூறி அப்பாவி பொதுமக்கள் மீது போகோ ஹாரம் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

A huge crowd of mourners attended the funeral while dozens more are feared missing as security forces hunt for them

இந்நிலையில், இந்த சம்பவம் நைஜீரியாவில் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ள அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான மிக வன்முறையான நேரடித் தாக்குதலாகும்.