நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண், நம்பர் 28 ஆம் திகதி முல்லேரியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொத்தெட்டுவ பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண், நம்பர் 27 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 73 வயது ஆண், நம்பர் 29 ஆம் திகதி ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

சிலாபம் பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண், நம்பர் 29 ஆம் திகதி சிலாபம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண், நம்பர் 27 ஆம் திகதி ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 90 வயது பெண், நம்பர் 29 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மருதானை பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண், நம்பர் 27 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.