(இராஜதுரை ஹஷான்)

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஊடாக கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும். அடுத்த ஆண்டு முதல் பெரும்பாலான இறக்குமதி உணவு பொருட்கள்  உள்ளூர் மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் என கமத்தொழில் அமைச்சர்  மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விவசாயத்துறை, கிராம அபிவிருத்திக்காக இம்முறை வரவு - செலவு திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு.

கடந்த அரசாங்கம் சிறு ஏற்றுதமி பயிர்களை இறக்குமதி செய்தது, அத்துடன் எமது நாட்டு உற்பத்திகள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் பாரிய முறைகேடுகள் இடம் பெற்றன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர்  சிறு ஏற்றுமதி பயிர்கள் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்குள் அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்படும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உருளை கிழங்கு ஆகிய  தானியங்களை உள்ளூர் மட்டத்தில் உற்பத்தி செய்ய ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும். நகரத்தில்  உள்ள அடிப்படை வசதிகள் கிராம புறங்களில் செயற்படுத்தப்படும் என்றார்.