நாட்டில் இன்று (29-11-2020) மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 23,311 ஆக உயர்வடைந்துள்ளதுடன்  6,200 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 346 பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 17,002 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 498  பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  109 ஆக உயர்வடைந்துள்ளது. 

அத்துடன் நாட்டில் இதுவரை 815897 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைகளில் 1000 ஐயும் கடந்து கொரோனா தொற்று 

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மேலும் 183 பேருக்க கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,091 ஆக உயர்வடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.