நாளை முதல்(30.11.2020) புறக்கோட்டை பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் சில பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மேல் மாகாணத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, புறக்கோட்டை மற்றும் கரையோரப் பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது நாளை அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. 

இருப்பினும், பழைய மெனிங் சந்தை, 04,05ஆம் குறுக்கு வீதிகள் ஆகியவற்றில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.