கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில்  இன்று முதல் நோயாளிகள்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி வைத்தியசாலையிருந்து 30   தொற்றாளர்களும், அத்தோடு மேலும்  10 நோயாளிகளுமாக 40 பேர்  இன்று அனுமதிக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் மருதங்கேணி  வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த கொரோனா சிகிச்சைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். 

அங்கு மழைக்காலத்தில்  மலசல கூட வசதிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக மூடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

200 பேர் சிகிச்சை பெறும் வகையில்  ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கிருஸ்ணபுரம் வைத்தியசாலையில் முதற்கட்டமாக இன்று 40 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர்.

குறித்த வைத்தியசாலை வட மாகாணத்திற்கான தொற்று நோயியல் வைத்தியசாலை இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.