இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் டியன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுநர் ரெஜனோல்ட் குரே ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை நேற்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில் இன்று காலை வடக்கிற்கு விஜயம் செய்துள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் வடக்கு முதல்வர், ஆளுநர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஷேலி விட்டின் உள்ளிட்ட கனடா நாட்டு பிரதிநிதிகள் சிலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.